பக்தர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்,
பூஸ்திதி அருள்மிகு சிவகுரு சாஸ்தா சுவாமி திருக்கோயிலில் மிகவும் பிரதானமான வழிபாடு சனி நிவர்த்தி அல்லது தோஷ வழிபாடு ஆகும்.
சனி என்றால் தடங்கல், நிவர்த்தி என்றால் மாற்றுவது. தோஷம் அல்லது தடங்கலை மாற்றுவது என்பது இவ் வழிபாட்டின் நோக்கம்.
சனி நிவர்த்தி என்றால் தடங்கல்களை சிவகுரு சாஸ்தா சுவாமி பாதத்தில் இறக்கி வைப்பது என்று பொருள்படும்.
பூஸ்திதி அருள்மிகு சிவகுரு சாஸ்தா சுவாமி முன்பு நடைபெறும் இப்புனிதமான பிரதான சுத்தி தோஷ பரிகார வழிபாடு இந்தியாவில் வேறு எந்த பகுதியிலும் நடைபெறாத தோஷ வழிபாடு ஆகும். சனி நிவர்த்தி என்பதே அற்புதங்கள் நடத்தும் வழிபாடு. அதுவும் சிவகுரு சாஸ்தா சுவாமிக்கு தோஷ வழிபாடு அதிசயங்கள் நடக்கும் வழிபாடு ஆகும்.
கலியுகத்தில் அஷ்ட அவதாரம் எடுத்து சிவனின் வாழ்ந்து மக்களின் கஷ்டங்கள், துயரங்கள், துக்கங்களைப் போக்க சிவகுரு சாஸ்தா சுவாமி மூலம் பூஸ்திதி வந்து சங்கடங்கள் தீர்க்கும் சிவகுரு சாஸ்தா சுவாமி அருள் பாலிக்கிறார்.
நன்கொடை அனுப்ப Click
இத்தகைய சக்திவாய்ந்த சிவகுரு சாஸ்தா சுவாமியை சங்கல்பித்து, சிதறு காய் அல்லது யாகம் மூலம் சிவகுரு சாஸ்தா சுவாமியின் அருள் படி அவர்களுடைய ஆசைகள், கஷ்டங்கள் நோய்களுக்கான தீர்வுகளையும் பரிகாரங்களையும் சிவகுரு சாஸ்தா சுவாமி அருள் மூலம் நிவாரணம் பெறும் ஒரு வழிபாடு சனி நிவர்த்தி ஆகும்.
சிவகுரு சாஸ்தா சுவாமியின் அருள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் கஷ்டங்கள், நோய்கள் துக்கங்கள், பிரச்சினைகளோடு வந்து மக்கள் சனி நிவர்த்தி பெற்று செல்கின்றனர்.
எல்லாவித கஷ்டங்களையும், தடங்கல்களையும், தீராத மன வேதனைகளையும் சிவகுரு சாஸ்தா சுவாமியால் மாற்ற முடியும். பூஸ்திதி சிவகுரு சாஸ்தா சுவாமியின் அருளால் சாதிக்க முடியாதது உலகில் எதுவும் இல்லை.
சனி நிவர்த்தி மூலம் பிரச்சினைகள் தீர்வது தினமும் கண் கூடாக கண்டுணருகின்ற உண்மை. பலரின் அனுபவங்களிலிருந்தும் இதை தெரிந்து கொள்ளலாம்.
சிறியவர்களானாலும், பெரியவர்களானாலும் பிரச்சனைகள் இல்லாத மனிதர்களில்லை. உங்கள் பிரச்சினைக்கு எளிமையாக தீர்வு கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமை பூஸ்திதி அருள்மிகு சிவகுரு சாஸ்தா சுவாமி திருக்கோயிலில் சனி நிவர்த்தி பரிகாரம். சிவகுரு சாஸ்தா சுவாமி அருள் எளிதில் கிடைக்கும்.
Discussion about this post